×

கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதை வெளிப்படையாக பேசக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கூட்டணியில் இருந்து செல்வோர் செல்லட்டும், அது அவர்களின் விருப்பம் என பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் கூறிவிட்டேன். தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை பாஜக தேசிய தலைமைதான் எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக என அண்ணாமலை தெரிவித்தார்.

நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக செய்தியாளர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
அஅதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து. 2 கோடி தொண்டர்கள் கட்சியில் இருப்பதாக அதிமுக சொல்கிறது, அதனால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம். இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதை வெளிப்படையாக பேசக்கூடாது என கூறினார்.

The post கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதை வெளிப்படையாக பேசக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bon ,Radhakrishnan ,BJP ,Annamalai ,Bon. ,
× RELATED புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை...